| |
Puthukkudiyiruppu Central College

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

Puthukkudiyiruppu Central College

News

வருடாந்த பரிசளிப்பு விழா 2026

← Back
வெளியிடப்பட்டது: October 09, 2026 •
Academic Fair
வருடாந்த பரிசளிப்பு விழா 2026

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 2026

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 02.10.2026 வெள்ளிக்கிழமை காலை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

நீண்ட வரலாற்றையும் தனித்துவமான கல்விப் பாரம்பரியத்தையும் கொண்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, கல்வி, விளையாட்டு, மொழித் திறன், கலைத்துறை மற்றும் அறிவியல் சார்ந்த செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை முன்னிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது கடந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 82 சதவீதமான மாணவர்கள் உயர்கல்விக்குத் தகுதி பெற்றிருந்தமை கல்லூரியின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதுடன் பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த விருந்தினர்கள், பரிசு பெறாத மாணவர்களும் அதே நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டனர். மேடையில் பெயர் அழைக்கப்படாதது வாழ்க்கையின் முடிவு அல்ல என்றும், ஒரு பரிசு ஒருவரை உயர்த்துவதுமில்லை, ஒரு தோல்வி ஒருவரைத் தாழ்த்துவதுமில்லை என்றும் மாணவர்கள் ஊக்கமளிக்கப்படனர்.

நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் நேவிற் ஜீவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன், பாடசாலையின் பழைய மாணவனும் யாழ். பல்கலைக்கழக வணிகபீட பேராசிரியருமான ராஜ் உமேஸ், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருவாட்டி டென்சியா கிரிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பாலராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

புகைப்படத் தொகுப்பு

WhatsApp Image 2026-10-08 at 7.36.30 PM (1)
WhatsApp Image 2026-10-08 at 7.36.30 PM
WhatsApp Image 2026-10-08 at 7.36.16 PM
WhatsApp Image 2026-10-08 at 7.36.18 PM
WhatsApp Image 2026-10-08 at 7.36.28 PM (1)
WhatsApp Image 2026-10-08 at 7.36.28 PM (2)
WhatsApp Image 2026-10-08 at 7.36.28 PM
WhatsApp Image 2026-10-08 at 7.36.29 PM (1)
WhatsApp Image 2026-10-08 at 7.36.29 PM (2)
WhatsApp Image 2026-10-08 at 7.36.29 PM